திணைக்களத்தின் வரலாற்று ரீதியான அபிவிருத்தி

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டம் ஏற்றுக்கொள்ளும் வரை ஒவ்வொரு மாவட்டத்தின் பிரதேச செயலகத்தின் மாவட்ட செயலாளரின் கீழ் சமூக சேவைகள் உதவி பணிப்பாளர் மூலம் சமூக சேவைகள் திணைக்கத்தின் கடமைகள் மேற்கொள்ளப்பட்டன. அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தின்மூலம் மாகாணசபைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதை அடுத்து அதுவரை சமூக சேவைகள் மாகாண பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட கடமைகள் மாகாண அமைச்சின் செயலாளர் ஊடாக சமூக சேவைகள் மாகாண பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்டன. இந்த சேகைளை மேற்கொள்ளுகின்றபோது, பின்வரும் சேவைகள் தென்மாகாணத்தின்  வறிய, மாற்றுத் திறன்கொண்ட, துன்பப்படுகின்ற மற்றும் அப்பாவி மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

சமூக சேவைகள் பிரிவின் பிரதான செயற்பாடுகள்

  • பொதுமக்களுக்கு உதவுவதற்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்.
  • எலும்புறுக்கி நோய்/புற்றுநோய்/தொழுநோய்/தலசீமியா நோயாளிகள் ஆகியோருக்கு நிதி உதவி வழங்குதல்.
  • பொதுமக்கள் உதவி பெறுகின்றவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துதல்.
  • அமய நிவாரணமளிக்கும் நிகழ்ச்சித்திட்டம்.
  • மாற்றுத் திறனாளிகளை சமூகமயப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுத்தல்.
  • மூக்கு கண்ணாடிகள், கண் குவிவில்லைகள், செவிப்புல கருவிகள், சக்கர நாற்காலிகள், கை ஊன்று தடிகள், கை தடிகள், நடை ஊன்றுகோல் மற்றும் முச்சக்கர வண்டிகள்.
  • முதியோர் இல்லங்கள், கட்புலன், செவிப்புலன் மற்றும் பார்வையற்றோர் பாடசாலைகள், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்கள் தொண்டர் நிறுவனங்கள் நடத்துகின்ற வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிலையங்கள், அத்தகைய நிலையங்களுக்கு அனுமதித்தல் மற்றும் மேற்பார்வைசெய்தல் மற்றும் இவற்றிற்கு உதவி வழங்குதல்.
  • மாகாண விடயத்தின் கீழ் குறிப்பாக அபிவிருத்தி மானியத்தின் கீழ் குறிப்பிட்ட நிறுவகங்களின் இல்லங்களில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களையும் உடல், உள சுகாதாரத்திற்கு பௌதிக வளங்களை விநியோகித்தல் ஆகிய நிகழ்ச்சித்திட்டங்களையும் அமுலாக்குதல்.
  • தற்கால சமூகத்தில் சமூக பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்.
  • நன்றாக பாதுகாக்கப்பட்ட சமூக நன்னெறிகளை அமுல்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்கள்.
  • சமூக சேவைகள் நிதியத்திலிருந்து மாற்றுத் திறனாளிளின் வறிய குடும்பங்களுக்கு கல்வி கற்பதற்கு, மருந்து எடுப்பதற்கு வீடு கட்டுவதற்கு உதவிகள் அளித்தல்.
  • கிராமப்புறங்களில் கண் சிகிச்சை நிலையங்களை அமைத்து ஏழை மக்களுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்குதல்.
  • ரிதியாகம தடுப்பு முகாமின் கீழ் கைவிடப்பட்ட மக்களுக்கு சேவைகளை வழங்குதல். சுமார் 600 குடியிருப்பாளர்கள் நீதி மன்ற கட்டளைப்படி குற்றவாளியாகக் காணப்பட்டு இந்த நிறுவகத்தில் புனர்வாழ்வளிக்கப்படுகின்றனர்.

செய்தி மற்றும் நிகழ்வுகள்