செயற்பணி

தென் மாகாணத்தில் வாழ்கின்ற மூத்தோர், மாற்றுத் திறனாளிகள், வறிய சமூகத்தின் நலனோம்பல் கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள், பங்கீடுபாட்டாளர்களை தென்மாகாண அபிவிருத்திக்கு தலைமையேற்க அனுமதித்தல், சிறுவர் அபிவிருத்திக்கும் அவர்களின் புனர்வாழ்வுக்கும் நடவடிக்கை எடுத்தல், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்த்தல், பொது வளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த அனுமதித்தல், இவற்றில் அரச சார்பற்ற நிறுவனங்களையும் தனிப்படடவர்களையும் கலந்துகொள்ள அனுமதித்தல் மற்றும் தென்மாகாண சமூக பாதுகாப்புக்கும் அநீதிக்குள்ளான மற்றும் தவறாக வழிறடத்தப்பட்ட சிறுவர்களுக்கு உதவுதல் என்பவையாகும்.

திணைக்களத்தின் பிரதான செயற்பாடுகள்

  • மூத்தோருக்கான சிகிச்சை நிலைய சேவைகளை நடத்துதல்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கும் குறைந்த வருமானம் பெறுகின்றவர்களுக்கும் வீடமைப்பு உதவிகளை வழங்குதல்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கும் குறைந்த வருமானம் பெறுகின்றவர்களுக்கும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு சுயதொழில் புரிவதற்கு உதவிகளை வழங்குதல்.
  • ரிதியாகம தடுப்பு இல்லத்தில் உள்ள அநாதைகளின் சமூக நலனோம்பலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்.
  • சிறுவர் மற்றும் இளைஞர் சட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பொருத்தமான சிறுவர்களுக்கு தனிப்பட்ட நிவாரணங்களை வழங்குதல்.
  • தென் மாகாணத்தில் சிறுவர் பூங்காக்களுக்கும் சிறுவர் இல்லங்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்குதல்.
  • நன்னடத்தையில் இடரை எதிர்நோக்கியுள்ள சிறுவர்களுக்கு புலமைப்பரிசு நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துதல்.
  • நன்னடத்தை இல்லங்களில் சிறுவர்களைத் தடுத்துவைத்தல் மற்றும் நனன்டத்தை பெறுகின்றவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குதல்.
  • உடல், உள, சமூகம் என்பவற்றில் சிறந்த நடத்தையுடன் சிறுவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துதல்.
  • சமூகத்தில் விசேட கவனிப்பு தேவைப்படுகின்ற சிறுவர்களுக்கு பாதுகாப்பையும் வழிகாட்டலையும் அளித்தல்.
  • நன்னடத்தை நிலையங்களில் உள்ள சிறுவர்களுக்கு சிறுவர் தின விழாக்களையும் விளையாட்டுப்போட்டிகளையும் நடத்துதல்.
  • துஷ்பிரயோகிக்கப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட சிறுவர்களுக்கு நலனோம்பலையும் புனர்வாழ்வையும் அளித்தல்.
  • சிறுவர் உரிமைகளைப்பற்றி பொதுமக்களுக்கு அறிவூட்டுதல்.

நன்னடத்தை திணைக்களத்தின் வரலாறு

சிறுவர் பராமரிப்பு, நன்னடத்தை சேவைகள் திணைக்களம் 1956ஆம் ஆண்டு மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் ஸ்தாபிக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு அதன் கடமைகள், பொறுப்புகள், அதிகாரங்கள் என்பன ஒப்படைக்கப்பட்டன. திணைக்களத்தின் சேவைகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்க முடியம். அவையாவன,

  • புனர்வாழ்வு சேவைகள்
  • சிறுவர் பராமரிப்பு சேவைகள்
  • கலப்பு சேவைகள்

புனர்வாழ்வு சேவைகளின் கீழ் பால்ய குற்றச்செயல்களில் சம்பந்தப்படுகின்ற சிறுவர்களுக்காக சான்றுப்படுத்தப்பட்ட பாடசாலைகள், தடுப்பு இல்லங்கள் மற்றும் விளகக்மறியல் இல்லங்கள் என்பவை இருக்கின்றன. 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு சட்டபூர்மான பாதுகாவலர் மாவட்ட நீதிமன்றமாகும். மாவட்ட நீதிமன்றம் இந்த அதிகாரங்களை சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களத்திற்கு வழங்கியுள்ளது. எனவே கைவிடப்பட்ட, துஷ்பிரயோகிக்கப்பட்ட, இடருக்குள்ளாகியுள்ள சிறுவர்களைக் கவனிப்பது திணைக்களத்தின் கடமையாகும்.

History of the of the Social Services Department

Session is under construction

செய்தி மற்றும் நிகழ்வுகள்